நடுநிலை மாறாது நியூஸ் ஜெ - துணை முதலமைச்சர்

Sep 12, 2018 07:20 PM 1422

 

செய்திகளை பரபரப்புக்காக உருவாக்காமல், உள்ளது உள்ளபடி சொல்லும் தொலைக்காட்சியாக நியூஸ் ஜெ பரிணமிக்கும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம் உறுதி அளித்துள்ளார்.

நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் இலச்சினை, கைப்பேசி செயலி மற்றும் இணையதளத்தை தொடங்கி வைக்கும் விழாவில் சிறப்புரை ஆற்றிய அவர் இதனைத் தெரிவித்தார்.

எம்.ஜி.ஆர்-ஆல் உருவாக்கப்பட்டு புரட்சித் தலைவி ஜெயலலிதாவால் வளர்தெடுக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க. வின் கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் ஊடகம் ஒன்றுக்காக நீண்ட நாட்களாக, கழகத் தொண்டர்களும், தமிழக மக்களும் காத்திருந்தனர்.

அந்த வருத்தத்தை போக்கும் விதமாகவும், ஒன்றைரை கோடி தொண்டர்களையும், ஏழரை கோடி தமிழர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாகவும் நியூஸ் ஜெ தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளது. அதன் முன்னோட்டமாக நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் இலச்சினை, கைப்பேசி செயலி மற்றும் இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஒருசார்பு செய்தியைப் பார்த்து மக்கள் புளித்து போயுள்ளனர். பரபரப்புக்காக தகவல்களை திரித்து ஒரு சார்பாக செய்திகளைத் தரும் நிலையை மாற்றி, நடுநிலை மாறாமல், உள்ளது உள்ளபடி மக்கள் மத்தியில் செய்திகளை எடுத்துச் செல்லும் நிறைவான ஊடகமாக மக்கள் மனதில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி இடம் பிடிக்கும்.

அம்மா ஆட்சியின் போற்றத்தக்க சாதனைகளை எடுத்துச் செல்ல ஒரு தொலைக்காட்சி தேவை என்ற கனவு நனவாகப்போகிறது. எப்போது சோதனை ஓட்டம் தொடங்கும், எப்போது ஒளிபரப்பு தொடங்கும் என ஒன்றரை கோடி தொண்டர்களோடு நானும் காத்திருக்கிறேன்.

பத்தோடு பதினொன்றாக இல்லாமல், நியூஸ் ஜெ தொலைக்காட்சி சிறந்து விளங்கும். புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் புகழையும், அஇஅதிமுக-வின் கொள்கை, கோட்பாடுகளையும் நியூஸ் ஜெ உலகறியச் செய்யும். மக்கள் நலத்திட்டம் மற்றும் அதன் பயன்களை அனைவருக்கும் அறியச் செய்து மக்கள் பயனடைய நியூஸ் ஜெ உதவும். நியூஸ் ஜெ வளர்ச்சி பெற வாழ்த்துகள். இவ்வாறு துணை முதலமைச்சர் ஒ. பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார்.

Comment

Successfully posted


Super User

தொடங்கப்பட உள்ள News J தொலைக் காட்சி நிகழ்ச்சிகள் மற்ற ஏனைய செய்தி அலவரிசைகளைப் போல் அல்லாமல் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கவேண்டும். செய்திகளில் உண்மைத்தன்மை பெற்றிருக்க வேண்டும். மக்களைக் கெடுக்கும் விதமான கருத்துக்கள் மொழிப் பேச்சுகள் இல்லாத நிகழ்ச்சிகள் இடம்பெற வேண்டும். மொத்தத்தில் News J தொலைக் காட்சி ஓர் தனித்துவம் கொண்டதாக அமைந்திட வேண்டும். வாழ்த்துக்கள்.


Super User

very very happy


Super User

தயவுசெய்து அடிக்கடி அம்மாவின் குறல் ஒலிபரப்பவும்


Super User

சிறப்பு மகிழ்ச்சி யாக உள்ளது


Super User

வெற்றி பெற வாழ்த்துக்கள்


Super User

super jop continues successful govt...


Super User

நம் கழகத்துக்கு ஒரு ஊடகம் தேவை


Super User

வாழ்துக்கள்


Super User

நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்...!


Super User

மிக்க மகிழ்ச்சி, மனமார்ந்த வாழ்த்துக்கள்


Super User

amma maraivirku piraghu katchikendru oru oodahattai arambam seida ammavin arasirkum adanai valinatattum Annan EPS AND OPS avarkalukku en nenjarnda nalvalthukkalai terivittukolkiren valka idhayadeivam amma


Super User

மகிழ்ச்சி வாழ்த்துக்கள்


Super User

super


Super User

இதயதெய்வங்கள் ஆசியுடன் நல்வாழ்த்துக்கள்


Super User

மாண்புமிகு அம்மாவை வணங்கி பதிவிடுகிறேன் நான் மட்டுமல்ல நமது அ இ அ தி மு க பேரியியக்கத்தின் 1 1/2 கோடி தொண்டர்கள் மற்றும் 6 1/2 கோடி தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கழகத்துக்கென்று தொலைகாட்சி வேண்டும் என்பது அதனை நிறைவேற்றிய கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் மாண்புமிகு ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் மற்றும் கழக இனை ஒருங்கிணைப்பாளர் ,தமிழக முதல்வர் அவர்களுக்கும் தமிழ்க மக்களின் சார்பாக மிக்க நன்றி!!!!உண்மை செய்தியை பொது மக்களுக்கிடையே கொண்டு செல்லும் நீயூஸ் ஜெ என நம்புகிறோம், விபச்சார ஊடகங்களின் முகத்திரையை கிழித்து தொங்கவிட கழகத்தால் தொடங்கப்பட்ட நீயுஸ் ஜெ சேனலை மனதார வாழ்த்தி வரவேற்கிறோம் மற்றும் அம்மாவின் புகழும் வெற்றியும் மக்களிடம் கொண்டு செல்லவேண்டும் , மக்கள் தினமும் அம்மாவின் முகத்தை பார்க்கும் வகையில் அம்மா புகைப்படம் தினமும் காண்பிக்கவேண்டும் , கழக நடவடிக்கைகள் , அரசின் திட்டங்கல் அனைத்தும் இருக்க வேண்டும் !!!!வாழ்த்துக்கள் அம்மா அம்மா புரட்சி தலைவி அம்மா வாழ்க வாழ்க


Super User

வாழ்த்துக்கள்


Super User

வாழ்த்துக்கள் தொடரும் அம்மா ஆட்சி நீங்கள் உள்ள வரை


Super User

வாழ்த்துக்கள் உலகமே அதிசயம் காணட்டும்


Super User

nice. congratulations


Super User

please bring j deepa voters need


Super User

Valthukal