நாடாளுமன்ற ஜனநயாகத்தில் இன்று மிக முக்கியமான நாள் -மோடி

Jul 20, 2018 10:48 AM 432

மத்திய பாஜக அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று வாக்கெடுப்பு நடைபெறுகிறது. இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள பிரதமர் மோடி, நாடாளுமன்ற ஜனநயாகத்தில் இன்று மிக முக்கியமான நாள் என்று குறிப்பிட்டுள்ளார். இன்று நடைபெறும் விவாதம் ஆக்கப்பூர்வமாகவும் விரிவாகவும் அமளியின்றியும் நடைபெறும் என  நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். மக்களுக்கும், அரசியல் அமைப்பை உருவாக்கியவர்களுக்கும் நாம் கடமைப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Comment

Successfully posted