நாடு முழுவதும் மழை வெள்ளத்துக்கு 1,400 பேர் உயிரிழப்பு

Sep 04, 2018 12:39 PM 438

நாடு முழுவதும் மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களால் 10 மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஆயிரத்து 400 பேர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, தேசிய பேரிடர் மீட்பு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கேரளாவில் மட்டும் 488 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 254 பேரும், மேற்கு வங்கத்தில் 210 பேரும், கர்நாடகாவில் 170 பேரும் மழை வெள்ளத்தில் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிராவில் 139 பேரும், குஜராத்தில் 52 பேரும், அஸ்ஸாமில் 50 பேரும் உயிரிழந்துள்ளனர். மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களால் பல்வேறு மாநிலங்களில் 43 பேர் வரை மாயமாகி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் ஒடிஸாவில் 30 மாவட்டங்களும், மகாராஷ்டிரத்தில் 26 மாவட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்பு மையம் தெரிவித்துள்ளது.

Related items

Comment

Successfully posted