பழி சொற்களை மன தைரியத்தோடு எதிர்கொள்ள தயார்- ஆர்.பி உதயகுமார்

Sep 09, 2018 11:30 AM 371

மதுரையில் அதிமுக பேரவை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் பேரணி, பிரச்சாரம் உள்ளிட்டவை குறித்து திட்டமிடப்பட்டது. அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தபோது அதிமுக சந்தித்த சவால்களை விட தற்போது கூடுதலாகச் சந்தித்து வருவதாக தெரிவித்தார். ஆனால் அதை கடந்து மக்கள் ஆதரவுடன் அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக கூறிய அவர், பொதுவாழ்க்கையில் இருப்பதால் பொய்க் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது பழகி விட்டதாக குறிப்பிட்டார். தங்கள் மீது தொடரப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளை மன தைரியத்தோடு எதிர்கொள்ள தயாராக இருப்பதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

Comment

Successfully posted