பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்ஷெரிப் கைதுக்கு காரணம் என்ன தெரியுமா?

Jul 13, 2018 05:27 PM 1111

பனாமா ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் அபுதாபி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் பனாமா பேப்பர்ஸ் லீக் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினர். இதனால், அந்நாட்டு உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, பிரதமர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

நவாஸின் மகள் மற்றும் மருமகன் மீதும் ஊழல் மூலம் லண்டனில் சொத்துக்கள் வாங்கியதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் நவாஸ் ஷெரிப், அவரது மகள் மரியம் தாஸ் மருமகன் கேப்டன் சப்தார் ஆகியோர் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த சில தினங்களுக்கு முன் நவாஸ் ஷெரிப்புக்கு 10 ஆண்டுகள் சிறையும், மகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் நீதிமன்றம் விதித்தது. மருமகனுக்கு 1 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்தநிலையில், லண்டனில் இருந்து நவாஸ் ஷெரீப்பும் அவரது மகளும் பாகிஸ்தான் வருவதாக செய்திகள் வெளியானது.

லண்டனில் இருந்து அபுதாபி வந்த நவாஸ் ஷெரீப்பை தேசிய பொறுப்புடைமை முகமை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லாகூர் அழைத்து வரப்பட்டு பின்னர் அந்நாட்டு போலீசாரால் நவாஸ் ஷெரீப் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

Comment

Successfully posted