பாஜக -வுக்கு மக்கள் செல்வாக்கு அதிகம் -அமித் ஷா

Sep 04, 2018 12:42 PM 249

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவும் கணிசமாக இடங்களை கைப்பற்றி 2வது இடத்தை பிடித்துள்ளது. ஆளும் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் 375 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் அமித் ஷா, நகர்புறங்களில் பாஜக அமோக வெற்றி பெற்று இருப்பதாக கூறியுள்ளார். தங்கள் கட்சிக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்து இருப்பதை உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் காட்டுவதாக அவர் தெரிவித்துள்ளார். மோடி தலைமையில் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைந்தால், மாநிலங்களின் வளர்ச்சியில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று அமித் ஷா உறுதி அளித்துள்ளார்.

Comment

Successfully posted