பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 10-ம் தேதி அடிக்கல் நாட்டுகிறார்

Oct 08, 2018 06:28 AM 205

 

திருச்செந்தூரில் அமையவுள்ள பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு 10-ந் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டுகிறார்


திருச்செந்தூரில் அரசு சார்பில் பத்மஸ்ரீ பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று கடந்த ஆண்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து திருச்செந்தூரில் தூத்துக்குடி பிரதான சாலையில் உள்ள ஆதித்தனார் கல்லூரி அருகே சிவந்தி அகாடமி வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டது.

இந்த இடத்தை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் 1 கோடியே 34 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. இதையடுத்து வருகிற 10-ந்தேதி காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுகிறார். திருச்செந்தூரில் நடைபெறும் நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொள்வதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted