பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் 3 பேருக்கு சம்பளம் "கட்"

Sep 01, 2018 04:46 PM 326

நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி காங்கிரஸ் அரசின் ஒப்புதல் இல்லாமல் நியமிக்கப்பட்ட பா.ஜ.க. எம்.எல்.ஏக்கள் 3 பேர், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த மேல்முறையீட்டு வழக்கில் வரும் 11ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. அதுவரை பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்க முடியாது என சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு வாக்களிக்க உரிமை இல்லை என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted