பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளிவரும் பரியேறும் பெருமாள்

Sep 02, 2018 04:10 PM 254

இயக்குநர் ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ், இயக்குநராக அறிமுகமாகும் படம் பரியேறும் பெருமாள். இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ள படத்தில், சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக கயல் ஆனந்தியும் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். தென்தமிழக பள்ளி, கல்லூரிகளிலும், எளிய மக்களிடமும் உள்ள பிரிவினை படிநிலை பற்றி படம் பேசுவதாக இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையில் `கருப்பி', `எங்கும் புகழ்' என்ற இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. படத்தின் இசை வரும் 9ஆம் தேதி வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. வரும் 28ஆம் தேதி படம் வெளியாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted