பிரதமர் மோடி தமிழகம் வருகிறார் - தமிழிசை தகவல்!

Sep 20, 2018 07:17 PM 392

பிரதமர் நரேந்திர மோடி, இந்த மாத இறுதியில் அல்லது நவம்பரில் தமிழகம் வர உள்ளதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் பணிகளை பாரதிய ஜனதா கட்சி தொடங்கிவிட்டது என்றார்.

கட்சிப்பணியாக பிரதமர் மோடி, அடுத்த வாரம் அல்லது நவம்பரில் வர உள்ளதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். தமிழக பாஜகவின் செயற்குழு கூட்டம் வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் ராஜபாளையத்தில் நடைபெற உள்ளது என்றார்.

இதில் இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
திமுகவுக்கு எதிராக அதிமுக போராட்டம் அறிவித்திருப்பது சரியான முடிவு என்று அவர் தெரிவித்தார்.

இலங்கையில் கடைசிகட்ட போருக்கு இந்தியா உதவியதாக கூறிய ராஜபக்சேவின் பேச்சுக்கு ஸ்டாலின், திருமாவளவன், வைகோ ஆகியோர் இன்னும் கருத்து தெரிவிக்காதது ஏன் என்றும் அவர் வினவினார்.

Comment

Successfully posted

Super User

good