மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவுறுத்தல்

Aug 03, 2018 04:04 PM 342

பரபரப்பான சூழலில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு தயாராகும் வகையில், தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்கள்  ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். மக்களவை தேர்தலை அமைதியாக நடத்துவது குறித்து ஆட்சியர்களின் ஆலோசனைகள் இந்தக் கூட்டத்தில் பெறப்பட்டன.  தேர்தல் பணிகளை முறையாக மேற்கொள்வது, மின்னணு வாக்குப்பதிவு குறித்த பயிற்சியும் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ அறிவுறுத்தினார்.

Comment

Successfully posted