மேட்டூர் அணை நீர்மட்டம் கிடுகிடு உயர்வு

Jul 18, 2018 12:13 PM 547

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் தொடர்ந்து நிரம்பி வருகின்றன. இதனையடுத்து, அணைகளின் பாதுகாப்பு கருதி, 1 லட்சத்து பத்தாயிரம் கனஅடிக்கு மேல் உபரிநீர் தமிழகத்துக்குத் திறந்து விடப்பட்டது. இதனால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. இந்நிலையில், நேற்று கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் அதிகளவில் திறக்கப்பட்டதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 100 அடியை எட்டியது. தற்போது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102 அடியை தாண்டி முழு கொள்ளவையும் எட்ட உள்ளது.  இதனிடையே, கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு, அணையின் நீர்மட்டம் தற்போது 100 அடியை தாண்டி உள்ளதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மேட்டூர் அணையில் மலர்கள் தூவி வரவேற்றனர். தற்போது, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102.68 அடியாகவும், நீர் இருப்பு 68.35 டிஎம்சியாகவும் உள்ளது. இதனிடையே, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 102 அடியை தாண்டி முழு கொள்ளவையும் எட்டி வருவதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லும்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comment

Successfully posted