மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது

Jul 23, 2018 01:48 PM 428

கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால், அந்த அணைகளில் இருந்து கடந்த வாரம் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கும் மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால், மேட்டூர் அணை கடந்த 17ஆம் தேதி 100 அடியை  எட்டியது. இதனைத்தொடர்ந்து, கடந்த 19ஆம் தேதி, அணையின் நீர்மட்டம் 109 அடியாக  உயர்ந்ததையடுத்து, முதலமைச்சர் பழனிசாமி, அணையில் இருந்து பாசனத்துக்கு நீரை திறந்து வைத்தார். இந்தநிலையில், 5 ஆண்டுகளுக்கு பிறகு உச்சபட்ச தேக்க அளவான 120 அடியை மேட்டூர் அணை எட்டியது. மொத்த கொள்ளளவான 93 புள்ளி 47 டி.எம்.சி.யையும் எட்டியது. அணையில் இருந்து விநாடிக்கு 30,000 கனஅடி  நீர் திறக்கப்பட்டு வருகிறது.  இது, நண்பகல் 40 ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து, காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  5 ஆண்டுகளுக்குப் பிறகு, மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்ட உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Comment

Successfully posted