மேற்கு இந்திய அணியுடன் டெஸ்ட் போட்டி- இந்திய அணி அறிவிப்பு

Sep 30, 2018 07:20 AM 508

 

மேற்கு இந்திய தீவுகளுடன் விளையாடப்போகும் இந்திய டெஸ்ட் அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் போட்டி, ஒரு நாள் போட்டி, டி ட்வெண்டி தொடர்களில் விளையாட உள்ளது. . 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் 4-ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில், இந்தத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில், தொடக்க ஆட்டக்காரர்கள் தவான் மற்றும் விஜய் சேர்க்கப்படவில்லை.

கேப்டன் விராட் கோலி ,துணை கேப்டன் அஜின்கியா ரஹானே, கேஎல் ராகுல், பிரித்வி ஷா, மயங்க் அகர்வால், சேத்தேஷ்வர் புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட் , ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்

இஷாந்த் சர்மா மற்றும் ஹார்த்திக் பாண்டியா ஆகியோர் காயம் காரணமாக பரிசீலிக்கப்பட வில்லை. புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted