மோடியின் அறிவுரைகளை கடைபிடித்து தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போம்: துணை முதல்வர்

Mar 25, 2020 10:48 AM 920

பிரதமர் மோடியின் அறிவுரைகளை கடைபிடித்து, தனிமை... அதுவே நம் எதிர்காலத்தின் இனிமை என்பதை உணர்வோம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தாக்கம், இந்தியாவிலும் காட்டுத் தீ போல பரவி வருவதாகவும், இதனால் ஏற்படும் விளைவுகளைத் தடுப்பதற்காகவே பிரதமர் நரேந்திர மோடி சமூக விலகலை அறிவுறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 21 நாட்கள் நாடு முழுவதும் ஊரடங்கிற்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், தமிழக அரசும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

நாம் ஒரு தமிழனாக தமிழ் மண்ணை காப்பதுடன், ஒரு இந்தியனாக தேசத்தைக் காக்க வேண்டும் என்றும், அதற்கு முதலில் நம்மை நாம் காத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார். தனிமை.. அதுவே நம் எதிர்காலத்தின் இனிமை என்பதை உணர்ந்து, பிரதமர் மோடியின் அறிவுரைகளை கடைபிடித்து, தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போம் என துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted