ரசிகர்களை கவர்ந்த மன்மோகன் சிங் வீடியோ

Sep 26, 2018 09:38 PM 607

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு the accidental prime minister என்ற பெயரில் பாலிவுட்டில் திரைப்படமாக தயாராகிறது.

இந்த படத்தில் நடிகர் அனுபம் கெர், மன்மோகன் சிங் வேடத்தில் நடித்து வருகிறார். மன்மோகன் சிங் இன்று தனது 86 வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக அனுபம் கெர் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.

இது இணையத்தில் வைரலாகி உள்ளது. பொருளாதார நிபுணராக இருந்து பிரதமரானது வரையுள்ள மன்மோகன் சிங்கின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படம் தயாராகி வருகிறது.

அர்ஜுன் மதூர், ராகுல் காந்தி வேடத்திலும், சுஸன்னே பெர்னாட், சோனியா காந்தி வேடத்திலும் நடிக்கிறார்கள். டிசம்பர் 21 ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது.

Comment

Successfully posted