ரூ.50 கோடி மதிப்பில் கதவணைகள்- சந்தீப் நந்தூரி

Aug 28, 2018 01:07 PM 318

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஓரிரு வாரத்தில் ஆய்வு மேற்கொள்ளும் என தெரிவித்தார். தாமிரபரணியில் பெருக்கெடுக்கும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்கும் வகையில், புன்னக்காயல் பகுதியில் 50 கோடி ரூபாய் மதிப்பில் கதவணைகள் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Comment

Successfully posted