லண்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பாண்டியா

Oct 09, 2019 10:02 PM 150

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான ஹர்த்திக் பாண்டியாவுக்கு, முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயத்திற்கு, லண்டன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை நடந்த தகவலை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் ஹர்த்திக் பாண்டியா, விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

ஹர்த்திக் பாண்டியா குறைந்தபட்சம் 3 முதல் 4 மாதங்கள் வரை கிரிக்கெட் விளையாட முடியாது என்ற தகவல் வெளியாகி உள்ளது, அவரது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted