வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய வரும் 31ஆம் தேதி கடைசி நாள்

Aug 27, 2018 12:16 PM 300

வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31ஆம் தேதி கடைசி நாளாக வருமான வரித்துறை அறிவித்திருந்தது. ஆனால் ஆன்லைன் மூலம் வருமான வரித் தாக்கல் செய்யும் போது ஏற்படும் தொழில்நுட்ப கோளாறு காரணமாக கால நீட்டிப்பு செய்யப்பட்டு, ஆகஸ்டு 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. மொத்த வருமானம் 5 லட்சத்துக்கும் மிகாமல் உள்ளவர்கள் 31 ஆம் தேதிக்கு பிறகு தாக்கல் செய்தால் அபராதமாக 1000 ரூபாய் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் 5000 ரூபாய் அபராதமாகவும், 5 லட்சத்தையும் தாண்டி அதிகமாக செலுத்துவோர் 10 ஆயிரம் ரூபாயும் அபராதமாக செலுத்த வேண்டும் என வருமான வருவரித்துறை எச்சரித்துள்ளது. வரி செலுத்துவோர் அனைவரும் வருமான வரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comment

Successfully posted