வருமான வரியை தாக்கல் செய்ய 15 நாள் கால அவகாசம்

Aug 29, 2018 12:58 PM 281

வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி வருமான வரி வரம்பிற்குள் உள்ளவர்கள் கணக்கை தாக்கல் செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வருமான வரிக்கணக்கை தற்போதை காலக்கெடுவிற்குள் தாக்கல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு மேலும் 15 நாள் கால அவகாசத்தை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related items

Comment

Successfully posted