விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்: முதல்வர்-துணை முதல்வர் இன்று பிரசாரம்

Oct 13, 2019 08:58 AM 239

இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரிக்கிறார்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து இன்று முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார். வரும் 14 மற்றும் 18 ஆகிய தேதிகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாங்குநேரி தொகுதியில் சுற்றுப் பயணம் செய்து அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்கிறார்.

விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். வரும் 16, 17 ஆகிய தேதிகளிலும் விக்கிரவாண்டி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

இதேபோல், விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். வரும் 14, 18 ஆகிய தேதிகளில் விக்கிரவாண்டி தொகுதியில் சுற்றுப் பயணம் செய்து அவர் வாக்கு சேகரிக்கிறார்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து வரும் 15, 16, 17 ஆகிய தேதிகளில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

Comment

Successfully posted