விநாயகர் சதுர்த்தி நாளில் அஜித் மற்றும் விஜய் படங்களின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Aug 20, 2018 03:37 PM 431

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விஸ்வாசம் படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்து வருகிறது. இதுவரை அந்த படம் தொடர்பாக எந்தவொரு விவரமும் வெளியாகாதநிலையில், வரும் 13ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி நாளில் விஸ்வாசம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்த விஸ்வாசம் திரைப்படம், தற்போது பொங்கல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள சர்கார் படம் தீபாவளிக்கு ரிலீஸாக உள்ளது. விஜய் புகைப்பிடிப்பது போன்று அண்மையில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்தநிலையில், சர்கார் பட ட்ரெய்லர் வரும் 13ஆம் தேதி வெளியிட முருகதாஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரேநாளில் அஜித் மற்றும் விஜய் படங்கள் தொடர்பான அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

 

 

Comment

Successfully posted