“இந்தியா பெரும் வளர்ச்சி கண்டுள்ளது யாருடைய ஆட்சியில் தெரியுமா?” - மோடி

Jul 14, 2018 05:48 PM 853

சுதந்திரத்திற்கு பிறகு பாஜக ஆட்சியில் தான் நாடு பெரும் வளர்சி அடைந்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு, நாடு முழுவதும் 50 இடங்களில் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார். உத்திரபிரதேச மாநிலத்தில் தனது பிரசாரத்தை அவர் தொடங்கியுள்ளார். அங்குள்ள அசாம்கார் நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, பாஜக தலைமையிலான ஆட்சி 50 ஆண்டுகளில் செய்ய வேண்டிய நலத்திட்ட பணிகளை 4 ஆண்டுகளில் செய்து சாதனை படைத்துள்ளதாக கூறினார்.

விவசாயிகள், தலித்துகள், ஏழைமக்கள் உள்ளிட்டோரின் முன்னேற்றமே பாஜகவின் இலக்கு என குறிப்பிட்ட மோடி, ஒட்டிற்காக மட்டுமே எதிர்கட்சிகள் ஒன்றினைந்துள்ளன என்றும் விமர்சித்துள்ளார். முன்னதாக 23 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் பூர்வாஞ்சல் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.

Comment

Successfully posted