மீண்டும் பாடகர் அவதாரமெடுக்கும் “தளபதி” விஜய் - பிகில் அப்டேட் இதுதான்..!

Jul 08, 2019 06:16 PM 326

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படம் “பிகில்”. இயக்குநர் அட்லியுடம் மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அண்மையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் 3 போஸ்டர்கள் வெளியிடப்பட்டு இணையத்தில் வெளியாகி செம வைரலாகின.

இந்நிலையில் இதுவரை இல்லாத அளவிற்கு படத்தின் விநியோக உரிமை அதிக தொகைக்கு விற்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. மேலும் படத்தை தயாரிக்கும் ஏஜிஎஸ் நிறுவனம் அவ்வப்போது படம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. சில தினங்களுக்கு முன்பு சிறந்த Fanmade போஸ்டர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றப்படும் என அறிவித்து ரசிகர்களுக்கு ஆச்சரியமூட்டும் வாய்ப்புகளை வழங்கினார்கள்.

இதற்கிடையில் இன்று மாலை 6 மணியளவில் பிகில் படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று படக்குழு அறிவித்தது. ஆனால் இந்த அறிவிப்பு , ‘டீசர், டிரெய்லர், சிங்கிள் பாடல், ஆடியோ ரிலீஸ் தேதி, படம் ரிலீஸ் தேதி என்பது குறித்த அறிவிப்புகள் கிடையாது என்றும், ஆனால் நீங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். என்னவென்று யோசியுங்கள்’ என்று ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் என்ன அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்த்திருந்தனர்.

 

நடிகர் விஜய் இந்த படத்தில் “வெறித்தனம்” என்ற பாடல் ஒன்றை பாடியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விஜய் இதுவரை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியதில்லை என்ற ரசிகர்களின் குறையை இந்த படத்தில் தீர்த்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் ட்விட்டரில் #BigilSurpriseUpdate, #BigilSUpdate என்ற ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. இந்த அறிவிப்பு நிச்சயம் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

Comment

Successfully posted