அய்யோ! அது வேற வாயி- அலறிய புல்லட் நாகராஜன்

Sep 12, 2018 09:53 PM 578

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேல மங்கலத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் என்ற புல்லட் நாகராஜன் . ரவுடியான புல்லட் நாகராஜன் மீது நகைபறிப்பு, வழிப்பறி, கொலை மிரட்டல், உள்பட 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை மத்திய சிறையில் கொலை வழக்கில் கைதாகி இருந்த ரவுடி நாக ராஜனின் அண்ணனை பெண் டாக்டர் ஒருவர் பரிசோதிக்க வந்தார். அப்போது பெண் டாக்டரை அவர் தகாத வார்த்தையில் பேசியதால் சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டாக உள்ள ஊர்மிளா, நாகராஜன் அண்ணன் மீது நடவடிக்கை எடுத்தார்.


இது குறித்து ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்ததும் புல்லட் நாகராஜனிடம் அவரது அண்ணன் கூறியிருக்கிறார். இதனால் புல்லட் நாகராஜன் போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளா மீது ஆத்திரம் அடைந்தார்.

உடனே வாட்ஸ்அப்பில் பேசி சிறைத்துறை போலீஸ் சூப்பிரண்டு ஊர்மிளாவிற்கு புல்லட் நாகராஜன் மிரட் டல் விடுத்தார். புல்லட் நாகராஜனின் வாட்ஸ்அப் மிரட்டல் வைரலாக பரவியது. அதே போன்று புல்லட் நாகராஜன் தென்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் மதனகலாவிற்கும் வாட்ஸ்அப் மூலம் மிரட்டல் விடுத்து பேசினார்.

இதையடுத்து புல்லட் நாகராஜன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

 அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் மது போதையில் போலீஸ் அதிகாரியையும், இன்ஸ்பெக்டரையும் வாட்ஸ்அப்பில் பேசி மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.போலீசாரை மிரட்டும் அளவுக்கு நான் பெரிய ரவுடி இல்லை என கெஞ்சியிருக்கிறார் புல்லட் நாகராஜன். இருப்பினும் போலீஸ் அடியில் இருந்து தப்பிப்பதற்கு ரவுடி புல்லட் நாகராஜன், மது போதை என நாடகம் ஆடுகிறாரா என்று அவர் மீது போலிசார் சந்தேகத்துடன் உள்ளனர்.

Related items

Comment

Successfully posted


Super User

அம்மா அவர்களின் வழியில் தமிழக அரசு மக்களை பாதுகாக்க சட்ட ஒழுங்கு விஷயத்தில் தக்க நடவடிக்கை எடுக்கிறது


Super User

Hi News J Congratulations For in our news channel I like it