பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் நடிகர் சத்யராஜ் மகள் சந்திப்பு

Jul 19, 2018 04:32 PM 635

பிரபல நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா ஊட்டச்சத்து நிபுணரும், அவர் உலகப் புகழ் பெற்ற அக்சய பாத்திரம் என்னும் தொண்டு நிறுவனத்தின் நல்லெண்ண தூதராகவும் சேவை செய்து வருகிறார். இந்நிலையில், சமீபத்தில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை திவ்யா சந்தித்தார். அக்சய பாத்திரம் என்னும் தொண்டு நிறுவனம் மூலம் பல பள்ளிகளுக்கு மதிய உணவு வழங்கி வருவதாகவும், அரசு பள்ளிகளிலும் சத்தான உணவு வழங்க தங்கள் தொண்டு நிறுவனத்தை அனுமதிக்க வேண்டும் என அமைச்சர் செங்கோட்டையனிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக திவ்யா கூறினார்.

 

Comment

Successfully posted