ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூலி தொழிலாளி வெட்டி கொடூர கொலை - இருவர் கைது

Oct 20, 2018 07:33 PM 283

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூலி தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு நாடார் பஜார் பகுதியில் வசித்து வந்த சரவணகுமார் என்பவர் கடந்த 11 ஆம் தேதி  மிக கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் குறித்து வத்திராயிருப்பு காவல் துறையினர் கொலையாளியை தீவிரமாக தேடி வந்த நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு  ரமேஷ் மற்றும் தினேஷ் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில், கருப்பசாமி என்ற இளைஞரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted