தூத்துக்குடியில் 95 சதவீத பிளாஸ்டிக்குகள் ஒழிப்பு

Jul 23, 2018 04:27 PM 627

தூத்துக்குடி தேவர்புரம் அருகே உள்ள உணவகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மாநகராட்சி ஆணையர் அல்பி ஜான் வர்கீஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றார். அப்போது பேசிய மாநகராட்சி ஆணையர் அல்பி ஜான் வர்கீஸ், பிளாஸ்டிக்கிற்கு தடை விதித்த தமிழக அரசின் உத்தரவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். பிளாஸ்டிக் பைக்கு பதிலாக பாத்திரங்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய அவர், பொதுமக்களுக்கு புதிய பாத்திரங்கள் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.

Comment

Successfully posted