வெளிநாடுகளுக்கு இணையாக மருத்துவ சிகிச்சை- அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்

Sep 30, 2018 06:48 AM 247


வெளிநாடுகளில் இருப்பதை போன்று விபத்து காய அவசர சிகிச்சை மையம் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டு இருப்பதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரன் தெரிவித்து உள்ளார்காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி என்ற இடத்தில் 24 மணி நேர இலவச அவசர சிகிச்சை மையத்தை அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பெஞ்சமின் ஆகியோர் திறந்து வைத்தனர்.

விழாவில் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் ,காஞ்சிபுரத்தில் உள்ள தலைமை சுகாதார மருத்துவமனை ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக விரைவில் மாற்றப்படும் என்று கூறினார். காஞ்சிபுரம் புற்றுநோய் மருத்துவமனை 24 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். உயிர்காக்கும் ஆம்புலன்சுகளை விரைவாக இயக்குவதில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக தமிழகம் இருப்பதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

Comment

Successfully posted