திரையுலகத்தினர் மீது பாலியல் புகார் கூறிவரும் நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்கு தொடர முடிவு

Jul 17, 2018 12:41 PM 495

ஆந்திர திரைப்பட நடிகை ஸ்ரீரெட்டி, ஆந்திர நடிகர் சங்க முன்பாக அரை நிர்வான போராட்டம் நடத்தி பரபரப்பாக்கினார். இந்நிலையில், நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றியதாக பல்வேறு இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறி வருகிறார். கடந்த வாரம் தனது டிவிட்டர் பக்கத்தில் இயக்குனர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன், சுந்தர் சி உள்ளிட்டவர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து இருந்தார். இதற்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த இயக்குனர் சுந்தர் சி நடிகை ஸ்ரீரெட்டி மீது வழக்கு தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார். பல்வேறு நடிகர்கள் மீது புகார் தெரிவித்திருந்த ஸ்ரீரெட்டி, நடிகர் அஜித்குமாரை புகழ்ந்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted