முதலமைச்சரிடம் விருது வாங்கிய அதிகாரி - இப்போது எந்த ஊரில் தெரியுமா?

Sep 06, 2018 06:24 PM 828

திருச்செங்கோடு நகராட்சி ஆணையராக R மகேஸ்வரி இன்று பதவியேற்றுக் கொண்டார். திருப்பூரை சேர்ந்த இவர் கடந்த 2013-ம் ஆண்டு பெரியகுளம் நகராட்சியில் பணியில் சேர்ந்து இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். அங்கு இவர் சிறந்த நகராட்சிக்கான விருதை அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பள்ளிபாளையம் நகராட்சியில் பணியாற்றினார் அங்கிருந்து பதவி உயர்வு பெற்று குமாரபாளையம் நகராட்சி ஆணையராக பதவி ஏற்று இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார் தற்போது  பணி மாறுதல் பெற்று திருச்செங்கோடு நகராட்சி ஆணையராக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட திருச்செங்கோடு நகராட்சியில் இன்று பிறப்புச் சான்றிதழில் முதல் கையொப்பமிட்டு தனது பணியை இன்று தொடங்கினார்.

ராசிபுரம் நகராட்சி ஆணையராக கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரது கணவர் ஆனந்தராஜ் மருந்தாளுநராக பணிபுரிந்து வருகிறார்.

Comment

Successfully posted

Super User

super


Super User

பரவாயில்லை...முயன்றால் மேலும் மெருகேற்றலாம்.....நிரறுவனர் திண்டிவனத்தாருக்கு வாழ்த்துக்கள்..செய்திப்பிரிவுக்கும் வாழ்த்துக்கள்.........