செங்கோட்டையில் இயல்பு நிலை திரும்பியது - மாவட்ட எஸ்.பி. பேட்டி

Sep 15, 2018 02:04 PM 442

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இயல்புநிலை திரும்பியுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்கணிப்பாளர் அருண்சக்தி குமார் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக இரண்டு நாட்களாக பதற்றம் நிலவி வந்தது. இதுதொடர்பாக இதுவரை 15க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

வன்முறை சம்பவங்கள் தொடர்பாக பெறப்பட்டுள்ள புகார்கள் அனைத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக வரக்கூடிய புகார்கள் அனைத்தும் பெறப்பட்டு. தன்மைக்கு ஏற்ப வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தி குமார், நேற்று மாலை வரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பிரச்சனைக்குரிய நபர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கடையநல்லூர் ஊர்வலத்தில் 250 காவலர்கள், 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 2 துணை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டார். 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட தேவை இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related items

Comment

Successfully posted