கால்நடைகளுக்கு கோமாரி நோய் பொய்யான தகவல் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

Oct 20, 2018 07:50 PM 799

கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவி வருவதாக எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு பொய்யான தகவலை பரப்பி வருவதாக, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கால்நடைகளுக்கு கோமாரி நோய் என்ற பொய்யான தகவலை எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு பரப்பி வருவதாகவும், தமிழகம் முழுவதும் வரும் முன் காப்போம் திட்டத்தின் கீழ் கோமாரி தடுப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், அனைத்து கால்நடைகளுக்கும் கோமாரி நோய் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதால், எந்த நோய் பாதிப்பும் இல்லை என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் உறுதிபட தெரிவித்தார்.Comment

Successfully posted