தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கர்நாடக முதலமைச்சர் உத்தரவு!

Jul 10, 2018 04:01 PM 1228

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. கபினி அணையிலிருந்து 30 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்ட நிலையில், இன்று 40 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

 

image

காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகத்திற்கு ஜூலை மாதம் வழங்க வேண்டிய 31 புள்ளி 24 டி.எம்.சி. நீரை வழங்க மாநில நீர்வள துறைக்கு கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற அனைத்து மாநில பிரதிநிதிகளும் கலந்து கொண்ட காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு உரிய நீரை வழங்க ஆணையம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted