மருத்துவர்கள் 8 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்

Oct 09, 2018 12:13 AM 545

அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் 8 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை 105 பேரிடம் இந்த ஆணையம் விசாரணை நடத்தி உள்ளது. இந்த நிலையில், அப்போலோ மருத்துவர்கள் 8 பேருக்கு  சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதய நோய் நிபுணர் விஜயசந்திர ரெட்டி, தீவிர சிகிச்சை பிரிவு மருத்துவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் இன்று ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

மருத்துவர்கள் சத்தியமூர்த்தி, பாபு கே.ஆப்ரஹாம் புதன்கிழமையும், மேத்தீவ் சாமுவேல் களரிக்கல், ரமேஷ் வெங்கடராமன் வியாழக்கிழமையும், கார்த்திகேசன், ரேமாண்ட் டொமினிக் ஆகியோர் வெள்ளிக்கிழமையும் ஆஜராக வேண்டும் என்று ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.

Comment

Successfully posted