பாகிஸ்தானில் வாக்குப்பதிவு தொடங்கியது

Jul 25, 2018 10:59 AM 839

பாகிஸ்தானில் உள்ள 85 ஆயிரம் வாக்குப் பதிவு மையங்களில், மக்கள் வாக்களித்து வருகின்றனர். பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில்  நவாஸ் கட்சிக்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெரீக் இ இன்சாப் கட்சிக்கும் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது. பாகிஸ்தானில் மொத்தம் உள்ள 342 தொகுதிகளில் பொதுத் தொகுதிகள் என கருதப்படும் 272ல் 141 தொகுதிகள் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளன. எனவே பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க பஞ்சாப் மாகாணத்தில் வெற்றி பெற வேண்டியது முக்கியமாகி உள்ளது. தேர்தலில் வெற்றி பெற்றவர் யார் என இன்று இரவே முடிவு அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted