நவராத்திரியை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் 3,000 கலைஞர்கள் ஒன்றிணைந்து நடனம் !

Oct 14, 2018 01:19 PM 702

நவராத்திரியை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் 3,000 கலைஞர்கள் ஒன்றிணைந்து நடனமாடிய காட்சி பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பழமை வாய்ந்த நடராஜர் கோயிலில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 9-ம் தேதி தொடங்கிய இந்த விழா வரும் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த நிலையில் அங்கு 3,000 நாட்டிய கலைஞர்கள், நான்கு பிரிவுகளாக ஒன்றிணைந்து நாட்டியம் ஆடி நடராஜருக்கு அர்ப்பணம் செய்தனர்.

Comment

Successfully posted