கர்நாடகாவில் வாலுடன் பிறந்த குழந்தை

Oct 03, 2018 11:36 PM 526

 

கர்நாடகாவில் வாலுடன் குழந்தை பிறந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம்,குடகு மாவட்டம் சனிவாரசந்தே பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சின்னம்மா. கர்ப்பிணியாக இருந்த சின்னம்மா ஹாசன் டவுனில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சின்னம்மாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே சின்னம்மாவுக்கு குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை அதிசய குழந்தையாக பிறந்தது. அதாவது அந்த குழந்தை 2 கால்களும் ஒட்டிய நிலையில், முதுகின் பின்னால் வாலுடன் பிறந்தது.

இதனை பார்த்த டாக்டர்களும், மூர்த்தியின் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பிறந்தது ஆண் குழந்தையா? அல்லது பெண் குழந்தையா? என்பதையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் பிறந்த ஒரு மணி நேரத்தில் திடீரென அந்த குழந்தை இறந்து போனது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comment

Successfully posted