இணையதளத்தில் சமநிலை கொள்கை! - மத்திய அரசு ஒப்புதல்

Jul 13, 2018 03:40 PM 747

இணையதள சம உரிமை பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.         

இணையதள பயன்பாட்டில் எவ்வித கட்டுப்பாடுமின்றி, அனைவருக்கும் சமமான இணைய சேவை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தொலை தொடர்பு ஆணையமான டிராய் பரிந்துரை செய்திருந்தது.

இதை பரிசீலனை செய்த மத்திய அரசு, அதற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சில தனியார் நிறுவனங்கள் அதிகப்படியான இணைய பயன்பாட்டை எடுத்துக்கொள்வதால், அதன் பயன்பாட்டாளர்களுக்கு தனித்தனி கட்டணம் விதிக்கப்பட்டது. இதைக்கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தில், இணைய சமநிலை கொள்கை அமலுக்கு வரவுள்ளது. 

Comment

Successfully posted