மெக்சிகோவில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு - 4 பேர் பலி

Sep 16, 2018 08:46 AM 602

மெக்சிகோவில் சுற்றுலாத்தலம் ஒன்றில் மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் பரிதாபமாக பலியாகினர்.

மெக்சிகோ சிட்டியில் உள்ள கரிபால்டி சுற்றுலா தலத்தில் ஏராளமான மக்கள் ஒன்றுகூடி உற்சாகமாக பொழுதை கழித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு மெக்சிகோவின் பாரம்பரிய மரியாச்சி (mariachi) இசைக்கலைஞர்களைப் போல் வேடமணிந்த 5 பேர் இருச்சக்கர வாகனத்தில் வந்தனர்.

திடீரென மறைத்து வைத்திருந்த துப்பாக்கிகளை வெளியே எடுத்த அவர்கள், அங்கு கூடியிருந்த சுற்றலாப் பயணிகளை நோக்கி சரமாரியாக சுட்டுத்து தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

எதிர்பாராத இந்த திடீர் தாக்குதலில் ஒரு பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். 9 பேர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போதைப்பொருள் கும்பலின் தாக்குதலாக இருக்குமோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted