தமிழகத்தில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இல்லை- நக்சல் தடுப்பு ஏ.டி.எஸ்.பி

Sep 23, 2018 05:32 AM 179

”தமிழகத்தில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் இல்லை” என நக்சல் தடுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

கோவையில் நக்சல் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் நவாஸ,் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது , தமிழகத்தில் நக்சலைட்டுகள் ஊடுருவாமல் இருக்க தமிழக சிறப்பு அதிரடிப்படை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவினர் இணைந்து பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.

இப்பணியில் முக்கியப் பங்காற்றி வரும் மலைவாழ் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். வெளி ஆட்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அவர்களிடமிருந்து தகவல்கள் கிடைக்கும் படி ஏற்பாடு செய்யபட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். காவல் துறையினரும் சோதனை சாவடிகள் அமைத்து தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், தமிழகத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இல்லை என கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் நவாஸ் தெரிவித்தார்.

Comment

Successfully posted