சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் - ப்ரீத்தி ஜிந்தா கருத்தால் சர்ச்சை

Oct 07, 2018 09:56 PM 431

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று நடிகையும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் தொடங்கப்பட்ட ஐபிஎல் இருபது ஓவர் தொடர் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த போட்டிகளின் போது நடைபெறும் சூதாட்டத்தால் கடும் சர்ச்சை எழுந்தது.

ஐபிஎல் நிர்வாகம் இது போன்ற சூதாட்டங்கள் நடைபெறாமல் இருக்க தொடர்ந்து கண்காணித்து வருகிறது. லோதா கமிட்டி சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கலாம் என பரிந்துரைத்த நிலையில், ஐபிஎல் அணிகளில் ஒன்றான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளரும், பிரபல நடிகையுமான ப்ரீத்தி ஜிந்தா அதற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், அரசு சூதாட்டத்தை சட்ட பூர்வமாக்கினால் சிறப்பானதாக இருக்கும் என்றும், அவ்வாறு செய்தால் சூதாட்டம் போன்றவற்றை நிறுத்த முடியும் என்று கூறினார்.

மேலும், பிசிசிஐ இதை ஒரு கொள்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

Comment

Successfully posted