இங்கிலாந்து வீரர்களுக்கு பாராட்டு - விராட்

Sep 03, 2018 01:13 PM 690

இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 271 ரன்களும் எடுத்திருந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 273 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் 184 ரன்களுக்கு சுருண்டது.. இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி, 3க்கு ஒன்று என கணக்கில் தொடரை கைப்பற்றியது. தோல்வி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கேப்டன் விராட் கோலி, வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக தாங்கள் நினைத்ததாகவும், ஆனால் எதிர்பார்த்தது போன்று நடக்கவில்லை என்று கூறினார். பந்து வீச்சில் இங்கிலாந்து அணி தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததை ஒப்புக் கொண்ட அவர், இங்கிலாந்து வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்

Comment

Successfully posted