தமிழகத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

Jul 23, 2018 04:22 PM 960

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களின் பல பகுதிகளில், இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது. மேலும், தென் மேற்கு பருவ மழை காரணமாக கடந்த 24 நான்கு மணி நேரத்தில் நிலகிரி, கோவை உள்ளிட்ட மாநிலங்களில் அதிகபட்சமாக நான்கு செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும், புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Comment

Successfully posted