பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா? - ரயில் டிக்கெட் ரெடி

Sep 13, 2018 09:02 PM 740

 

பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஏதுவாக ரயில் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

2019-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி முதல் 4 நாட்கள் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக வெளியூர்களில் உள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11-ஆம் தேதி சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று நடைபெற்றது. 12 ம் தேதி செல்வதற்கு நாளையும், 13 ம் தேதி செல்வதற்கு நாளை மறுநாளும் முன்பதிவு நடைபெறுகிறது.

Comment

Successfully posted