உதயநிதிக்கு பிளக்ஸ் பேனரால் வந்த நெருக்கடி!

Sep 07, 2018 02:42 PM 545

தஞ்சை கலைஞர் அறிவாலயத்தில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் கடந்த 4 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேக் டிராப்பாக வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரில் மு.க. ஸ்டாலின் புகைப்படத்துடன், உதயநிதி ஸ்டாலின் படமும் இடம் பெற்றது. இந்நிலையில் சாமுராய் என்ற திமுக தொண்டர் ஒருவர் டுவிட்டரில் இதுகுறித்து துணிச்சலாக விமர்சனம் செய்தார்.

"ஒரு திமுக தொண்டனாய் இதெல்லாம் எவ்வளவு அருவருப்பா இருக்கு தெரியுமா?
உங்களுக்கு தோணலையா? முன்னனி தலைவர்கள் மேடைல உங்க போட்டோ இடம்பெற உங்கள் தகுதி என்ன?" இது தான் அந்த தொண்டரின் மனக்குமுறல்.

இந்நிலையில் இதனை கவனித்த உதயநிதி ஸ்டாலின் மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார். "தவறு! மீண்டும் நடக்காது!" இவ்வாறு உதயநிதி பதிவிட்டுள்ளார்.

Comment

Successfully posted