விஞ்ஞானிகள் மூன்று பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

Oct 02, 2018 05:42 PM 338

இயற்பியலுக்கான நோபல் பரிசு, விஞ்ஞானிகள் மூன்று பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

ஆண்டு தோறும் இலக்கியம், அமைதி, இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அறிவியல் மற்றும் மருத்துவம் ஆகிய துறைகளில், உலகில் சிறந்து விளங்கும் ஆய்வாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் இந்தாண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு பெறுவோர் விவரம் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டுள்ளது.

லேசர் இயற்பியலில் முன்மாதிரி கண்டுபிடிப்புகளுக்காக அமெரிக்காவின் அர்துர் அஷ்கின் (arthur ashkin), அதி தீவிர ஆப்டிகல் பல்சஸ் முறைக்காக ஃபிரான்ஸை சேர்ந்த இயற்பியலாளர் ஜெரார்ட் மவுரவ் (gerard mourou) மற்றும் கனடாவைச் சேர்ந்த பேராசிரியரான டொன்னா ஸ்ட்ரிக்லாண்ட் (donna strickland) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted