இவங்களுக்கு அவங்க பரவாயில்லயாம்- அதிர்ச்சியில் கோலி அண்ட் கோ

Sep 12, 2018 09:45 PM 493

இங்கிலாந்து - இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய டெஸ்ட் அணி சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 1-4 என படுதோல்வியடைந்தது. இந்த தோல்வியின் மூலம் கடந்த 14 டெஸ்ட் போட்டியில் இரண்டில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 11 தோல்வியை சந்தித்துள்ளது. ஆசிய அணிகளில் பாகிஸ்தான் அணிதான் இங்கிலாந்து மண்ணில் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. வெற்றியிலும் அந்த அணியே முன்னணி வகிக்கிறது.

பாகிஸ்தான் அணி இங்கிலாந்து மண்ணில் 53 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் 12-ல் வெற்றி பெற்றுள்ளது. 23-ல் தோல்வியடைந்துள்ளது. 18 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன.

 இந்தியா 62 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகள் மட்டுமே பெற்றுள்ளது. 34 போட்டிகளில் தோல்வியையும், 21-ல் டிராவும் செய்துள்ளது.

இலங்கை அணி 18 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 8-ல் தோல்வியையும், 7-ல் டிராவும் கண்டுள்ளது.

வங்காள தேசம் தான் விளையாடிய நான்கு டெஸ்டிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

Related items

Comment

Successfully posted