இந்தியாவின் புதிய தங்க மங்கை ஹிமா தாஸ்!

Jul 14, 2018 04:59 PM 1084

பின்லாந்தில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் தடகள பிரிவில் இந்தியாவின் ஹிமா தாஸ் தங்கம் வென்று சாதனை படைத்தார்.

உலக ஜூனியர் தடகள போட்டிகள் பின்லாந்தில் நடைப்பெற்று வருகிறது. இதில் இந்தியாவின் சார்பில் பங்கேற்ற அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டப்பந்த பிரிவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார்.

இதன் மூலம், உலக ஜூனியர் தடகள பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமாவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

Comment

Successfully posted