தமிழகத்தில் 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் - அமைச்சர் செங்கோட்டையன்

Sep 24, 2018 10:33 AM 701

கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இலங்கைக்கு அரசுமுறை பயணமாக சென்று வந்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும்,  யாழ்ப்பாணத்தில் உள்ள பழமையான நூலகத்திற்கு 50 ,000 நூல்கள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

9,10,11,12ம் வகுப்புகள் கணினி மயமாக்கப்பட உள்ளதாகவும், இதற்காக 3,000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இந்த பணிகள் நிறைவடைந்தவுடன் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அவர் குறிப்பிட்டார். 

பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம்  தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தப் பணிகள் விரைவில் நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

Comment

Successfully posted

Super User

good